கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸார் பொதுமகன் மீது தாக்கியமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரனை

கிண்ணியா போக்குவரத்துப் பொலிஸாரால் கடந்த 09.04.2017 அன்று தாக்குதல் நடாத்தப்பட்ட எஸ்.எம்.கைசர்( வயது30) இது தொடர்பாக திருகோணமலை பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த பொலிஸார்மீது நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.இந்த முறைப்பாட்டுக்கெதிராக விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக இன்று(20) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் இருந்து தாக்குதலுக்குள்ளானவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரனைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடாத்தவுள்ளதாகவும் குறித்த நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்