இணையத்தின் ஊடாக கடவுச் சீட்டுக்களை பெறும் வசதி விரைவில்

இணையத்தின் மூலம்  கடவுச் சீட்டுக்களை வெளியிடுவது குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நவீனப்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகஇ அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை கடன் அட்டைகள் மூலட் வழங்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ் வருட இறுதிக்குள் இந்த வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகஇ குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்