உணவு வாங்க சென்ற குழந்தை உயிரிழப்பு

சம்மாந்துறை – நிந்தவூர் பகுதியில் பெக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் லொறியொன்றல் மோதுண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

தனது தாயுடன் உணவு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்து குழந்தை நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

ஒன்றரை வயதான குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்