கமல்ஹாசனின் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

கமல்ஹாசனின் தயாரிப்பு, இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’.

விஸ்வரூபம் படமாக்கப்பட்டபோதே, விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுப்பதில் கமல் கவனம் செலுத்தினார். ஆனால், இடையில் எழுந்த பிரச்சினையினால் படம் பாதியிலேயே தடைப்பட்டது.

இந்நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

முதல் பாகத்தில் நடித்த உலக நாயகன் கமல்ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா ஆகியோரே இப்படத்திலும் கைகோர்க்கின்றனர். இப்படம் ஆறு மாதத்திற்குள் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்