தயாரிப்பாளர்களை திருப்திப்படுத்துமா அஜித்தின் ‘விவேகம்’?

அஜித் நடிப்பில் உருவாகிவரும் விவேகம் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் அஜித்தின் சில படங்களை படக்குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு இரசிகர்களை உற்சாகப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில், அஜித்தின் பிறந்த தினமான மே மாதம் முதலாம் திகதி இப்படத்தின் ரீஸரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையில் விவேகம் படத்தின் பட்ஜெட், சொன்னதை விட பல மடங்கு அதிகரித்துவிட்டதாம். இதனால் இப்படம் முதல் வார இறுதியில் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்தால்தான் தயாரிப்பாளர்கள் சற்று திருப்தியடைய முடியுமென கூறப்படுகின்றது.

இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த வீரம், வேதாளம் ஆகியவற்றின் வசூல் 100 கோடி ரூபாயை தாண்டியதால், இப்படமும் தயாரிப்பாளர்களை திருப்தியடைய வைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்