ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திரைக்குவரும் ‘மகாபாரதம்’

பழம்பெரும் இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதம், எதிர்வரும்  2020ஆம் ஆண்டில் 1,000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான முறையில் திரைப்படமாக  வெளிவர இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனித வாழ்வின் மகத்துவத்தையும், வாழ்வியல் முறையையும் கற்றுக் கொடுக்கும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டும் இந்தியாவின் மிகப்பெரும் இதிகாசங்கள் ஆகும்.

சரித்திரக் கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஏற்கெனவே  திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மகாபாரதத்தை நவீன தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறையும் இரசிக்கும் வகையில் திரைப்படமாக எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்