வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் மருத்துவ உதவித்தொகை வழங்கி வைப்பு

 

நேற்றைய தினம் எமது புலம்பெயர் உறவான கனடா நாட்டை சேர்ந்த பா.யதுகுலன் அவர்களால் தனது தந்தையின் ஞாபகார்த்தமாக முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பிதேசத்தில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்டு முரத்துவ வசதிக்கு பணம் இல்லாது துன்பபட்டுக் கொண்டிருக்கும் சின்னத்துரை இளஞ்சிங்கம் என்பவரின் மனைவிக்கு ரூபா 30000 வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.

மேற்படி இளம்சிங்கம் கமலாம்பிகை என்பவரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்க்கு விடுத்த வேண்டுகோளிற்க்கு அமைவாக நேற்றைய தினம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலத்தில் வைத்து அவரது அன்பளிப்பு பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு வங்கி பற்றுச்சீட்டு கமாலம்பிகையின் கையில் கொடுக்கபட்டது.

மருத்துவ சிகிச்சைக்கு உதவி வேண்டி வந்த வேளை இவ் உதவி தொகையை அன்பளிப்பு செய்துள்ள கனடா நாட்டை சேர்ந்த யதுகுலன் அவர்களுக்கு பாதிக்கபட்ட குடும்பம் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் நன்றிகளை கூறிக்கொள்ளும் தருணம் அவரது தந்தையின் ஆத்தமா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்