வலுவான ஐரோப்பா அமெரிக்காவிற்கு மிகவும் அத்தியவசியமாகும்: ட்ரம்ப்

ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமானதாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இத்தாலி ஜனாதிபதியுடன் நேற்று (வியாழக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகளுக்கு அமெரிக்கா தேவையான உதவிகளை மேற்கொள்ள தயாராக உள்ளது. வலுமிக்க ஐரோப்பா அனைவரது நலனுக்கும் மிகவும் முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

தற்போது ஐரோப்பாவின் வலுவான செயற்பாடுகளுக்கு ஆதரவை வெளிப்படுத்திவரும் ட்ரம்ப், இதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு வரவேற்பு தெரிவித்திருந்ததுடன், ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பிரித்தானியாவின் வழியை செயற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்