ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை வெளிவரும்: சசிகலாவின் மருமகன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மை வெளிவந்தால் பன்னீர்செல்வம் அணியை என்ன செய்வது என சசிகலாவின் சகோதரன் மகன் ஜெயானந்த் திவாகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வரும் நிலையில், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

சசிகலா மீது கொலை பழி சுமத்தி வருவதாகவும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை அளிக்கப்பட்ட போது ஜெயலலிதா பச்சை நிற ஆடையுடன் இருந்ததாகவும் அவரை அந்த ஆடையுடன் எதிரிகள் பார்க்கக் கூடாது என்பதற்காகவே வீடியோ காட்சியை வெளியிடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

சிங்கத்தை தாங்கள் சிங்கமாகவே பூ உலகை ஆளுவதற்கு ராஜ மரியாதையுடன் அனுப்பி வைத்ததாகவும் பன்னீர்செல்வம் அணியினர் ஜெயலலிதாவை பிணப்பெட்டியில் வைத்து வாக்கு கேட்டு கேவலப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த வீடியோ காட்சி தன்னிடம் இருப்பதாகவும் விரைவில் அந்த வீடியோவை தான் வெளியிடவுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

இவ்வாறு, உண்மையான குறித்த வீடியோவை வெளியிட்டால் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை என்ன செய்யலாம் எனவும் ஜெயானந்த் திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்