எது முக்கியம்!!


மாபியாவாய் இருப்பவனை
மனுசனாக்க ஆளில்லை
சாபியா ஹனபியா என
சண்டைக்கு பலர் இருக்கு

காலியான வயிற்றோடு
கால்வாசிப் பேர் இருக்கார்
பேலியோவா சோறா என
பெரும் போட்டி நடக்கிதுங்கே

பா ஜ காரன்கள்
பச்சையாய் கொல்கின்றான்
பீ ஜேக்கு ஏசுவதிலேயே
பிஸியானார் பல பேர்கள்

தெருக்குத் தெரு திரிவோரை
தேடிப் பார்க்க ஆளில்லை
துருக்கியின் ஆட்சிபற்றி
துடிக்கிறது விவாதங்கள்

ஊத்தவாளி நிறைந்திருக்கு
ஊரெல்லாம் நாறுகிறது
பகுபாலி-2 பார்க்க
பதறுகிறது பலர் மனம்

அவ்லியாவின் அற்புதத்தை
அடுக்கு மொழியில் ஓதுகிறார்
ஹவ்ள்ல தண்ணீர் இல்ல
கவனிக்க ஆளில்லை.

எனக்கும் சேர்த்தே
எழுதிய வரிகள் இவை
எது முக்கியம் என நினைத்து
இயங்குவதே சிறந்ததாம்.
Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்