மீளக்குடியேற்றம், காணாமல்போனோர் விவகாரத்துக்குத் தீர்வு! – ஜனாதிபதி வாக்குறுதி (photo)

வடக்கில் மீள்குடியேற்றம் குறித்து நடைபெறும் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திவரும் போராட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் பிரஸ்தாபித்தார்.
வடக்கில் அறுபது சதவீதமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர். அடுத்த மூன்று மாத காலத்தில் மிகுதியானோரும் மீள்குடியேற்றப்பட்டு விடுவார்கள். காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையைக் கவனத்தில் கொண்டு காணாமற்போனோர் தொடர்பான நடவடிக்கையை அரசு எடுக்கும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
கால அவகாசம் 
கையாளப்படும் 
“இலங்கை தொடர்பான ஐ.நா. தீர்மானத்துக்கு பதிலளிப்பதற்கு எமக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பின்புதான் நாம் பதிலளிக்கப்போகிறோம்.”
ஐ.நா. தீர்மானம் குறித்து மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் நாட்டின் இறைமை, நீதிபரிபாலனம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு குந்தகம் ஏற்படாதவாறு அரசு செயற்படும் என்றும் நாட்டைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உண்டு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
அமைச்சரவை மாற்றம்?
இன்னும் இரண்டு வாரங்களில் அரச நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளமை குறித்து ஜனாதிபதியிடம் நேற்றைய சந்திப்பில் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவையிலும் மாற்றம் வருமா என்று கேட்டார். அதற்கு ஜனாதிபதி பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்