மாங்குளம் மஸ்ஜிதில் ஹைறாத் புதிய பள்ளிவாயல் திறப்பு நிகழ்வு

வவுனியா ,செட்டிக்குளம்,மாங்குளம் எனும் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கபட்டுள்ள மஸ்ஜிதில்ஹைறாத் பெரிய பள்ளிவாயல் இன்று முதல் வக்பு  செய்யப்பட்டு திறந்துவைக்கப்படுகிறது.

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில்  அமைந்திருக்கும் இப்பள்ளி வாயலும், இவ்வூரும் கேந்திர ஸ்தலமாக காணப்படுகிறது. சகல விதமான வசதி வாய்ப்புளையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பள்ளிவாயலிற்கு உதவி நல்கிய யாவரிற்கும் மாங்குளம் கிராம வாசிகள் தமது நன்றியினைதெரிவிக்கின்றனர்.
கலாநிதி அப்துல் ஹமீட்டின் நெறிப்படுத்தலில் நடைபெற ஏற்பாடாகியுள்ள பள்ளிவாயல் திறப்பு நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியாேர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இப்புதிய பள்ளி வாயலின் முதலாவது குத்பா பிரசங்கம் ஜாமியா நளீமியா சிரேஸ்ட விரிவுரையாளர்  S.H.M.பழீல் நளீமி அவர்களால் நிகழ்த்தப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
ஷபீக் ரஜா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்