பருவம்

தோட்டத்தமிழன்

சுமையற்ற பருவம் கடந்து
சுகமான பள்ளி பருவத்தில்
நடந்து நகர்ந்து வந்த வயதில்
ஏற்பாட்ட காதல் இது

எல்லோருக்கும் வருமாம்
இந்த காதல்
எல்லா உயிருக்கும் வருமாம்
இந்த காதல் – ஆனால்
எல்லா அறிவையும் பெற்ற
மனிதனுக்கு வந்த காதல்தான்
மோதலில் முடிகிறது

பாடல்களில் கூட
ஆன் கவிஞர்கள் வரிகளுக்கு
ஆன் பாடகர்கள்
காதலை நினைத்து அழுகிறார்கள்

இதையெல்லாம் கேட்ட போது
என் உள்ளத்தில்
புதைந்திருந்த காதல் என்னும்
ஏமாற்ற விதை
ஒரு சில நிமிடங்களுக்குள்
வீருட்ஷமாகும்

அதில் என் காதலி
உலகில் எல்லோரையும்
விட அழகாய் இருந்தாள்
என் ஆன்மாவுக்கு
அர்த்தமாய் இருந்தாள்
அவள் அனுமதியில்லாமல்
என் நிழல் கூட
என்னோடு வராது தொரியுமா

எல்லாம் கேட்டு கேட்டு செய்தேன்
பச்சிளம் குழந்தையைப் போல்
தாய்மையுள்ளம் அவளது என்றென்னி
என்னுள் வந்த முதல் காதலை
தாரவாத்தேன்
தாரமாவாள் என்றென்னி

அவள் உதட்டில் உதிரும்
புன்னகையானாலும்
வார்த்தையானாலும்
எனக்கு மந்திரமானது

நான் ஒன்றும் புத்தனில்லையே
அதனால் பித்தனானேன்
அவள் மீது

உறவுகளை
கேட்டு வராது காதல்
என்பது தெரிந்தும்
எனக்கும் உங்களுக்கும்
ஒத்துவராதாம் என்று
ஐந்தாண்டு பழகிய காதலி
சொன்னபோது
செத்திருக்க வேண்டும்

நான் பிழைத்துக் கொண்டேன்
அதனால் தான்
வாழ்கிறேன் – இதில்
அன்பு பாசம் காதல் நேசம்
இவையெல்லாம்
தாரலமாய் கிடைத்தது
தாமதமானாலும்
தரமானதமாய் இருக்கிருது
இது நிம்மதி

ஆனால் உள்ளதில்
ஒரு மூலையில் அந்தக் காதல்
அமைதியாய் வாழ்கிறது
பேச்சிழந்து கிடந்த காதல்
ஞாபகங்கள் மூச்சுக் கொடுத்து
பேசவைக்கும் சில தருனங்களில்.
ஏமாற்றத்திலும் இன்று
ஒரு சுகம் இருக்க கண்டேன்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்