ஊடக சுதந்திரமும் நல்லாட்சியும்!!

தேசியத்திலும் சர்வதேசத்திலும் ஊடகம் என்பது யாவரும் அறிந்து கொண்டதே .நல்லாட்சியிலும் சரி ஜனநாயகரீதியான ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும் ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரமும் ஊடக தர்மமும் பாதுகாக்கப்பட வேண்டும் ஒரு செய்தியை ஊடகவாமிலாக அச்சு ஊடகம் இலத்திரனியல் ஊடகம் போன்றவற்றினூடாக நாட்டின் மூளை முடுக்கெல்லாம் உலகரியச் செய்வது ஊடகம் என்பதை யாரும் மறுக்க முடியாது.அந்த வகையில் இலங்கையின் ஊடக சுதந்திரத்தில் தரப்படுத்தலில் 141 ஆவது இடத்தை வகிக்கிறது இதற்கான பின்னடைவுக்கு யார்தான் காரணமோ தெரியவில்லை நல்லாட்சியிலும் சரி சொல்லாட்சியிலும் சரி ஊடக சுதந்திரம் வழங்கப்படவேண்டும் இதை விடுத்து ஊடக அங்சுறுத்தல் தொலைபேசி ஊடான மிறட்டல் தாக்குதல் நடாத்தல் உட்பட பலவகையான விடயங்கள் ஊடகத்தை மீறி நடக்குமானால் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுகிறது ஒரு செய்தியாளன் ஒரு செய்தியை அலசி ஆராய்ந்து எழுதவேண்டும் என்பார்கள் ஆனால் அதிலும் எழுதினால் விசேடமாக அரசியல்வாதிகளை எதிர்த்தால் உண்மையை உறக்கச் சொன்னால் ஊடக அடக்குமுறை அங்கு தாண்டவமாடுகிறது .ஊடகவியலாளன் நாட்டில் சுதந்திரமாக இங்கு வாழவழிவிடுங்கள் அதைவிடுத்து ஊடக தர்மத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதும் ஊடக சுதந்திரம் இழக்கப்படுகிறது.
எனவேதான் நடுநிலைமாகவும் ஊடகம் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும் அரசியலுக்காகவும் சோரம்போகக் கூடாது நல்லாட்சியில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் உடனடியாக அரசு நிறுத்தவேண்டும் பேனாவினை ஆயுதமாக பயன்படுத்தும் எம் ஊடகசுதந்திரத்தை வழங்குங்கள் தொலைபேசி மூலமான செய்திக்கான பிரதிபலன்தேடும் அச்சுறுத்தல் விடுக்கும் நிலையை இல்லாதொழிக்கவேண்டும் .ஊடகவியலாளர்களுக்கான தனியான கொள்கைகளாக கடுமையான திட்டம் வகுக்கப்படல் வேண்டும் ஊடக அடக்குமுறைக்கும் சட்டத்தில் திறுத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.அரசியல் சீர்திருத்தத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு போன்றன ஊடக செயலமர்வுகளும் நடைபெறுவதும் காலத்துக்கு காலம் ஊடக தர்மத்தை பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும்.இதைவிடுத்து தொலைபேசியில் தொல்லை கொடுப்பதற்கும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தோ அவர்களுக்கு ஆலோசனைகளை கூறவோ அரசியலால் முற்படவேண்டாம்.ஊடக அடக்கு முறைக்கு குரல்கொடுப்போம் அப்போதுதான் 141 இடத்தை பிடித்த இலங்கையை முன்னால் நகர்தி முன்னுக்கும் ஓரளவேனும் கொண்டுவரமுடியும்.
அந்த வகையில் யுனெஸ்கோ அமைப்பின் பரிந்துரைக்கு அமைய 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பத்திரிகை சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.‘தீர்மானமிகு தருணங்களில் விமர்சனப் பார்வை கொண்டோர்’ என்பதே இம்முறை சர்வதேச ஊடக தினத்தின் தொனிப்பொருளாகும்.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி ஆபிரிக்கப் பத்திரகைகளால் கூட்டாக பத்திரகை சுதந்திர சாசனம் உருவாக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது இது உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் பிரகடனப்படுத்தப்பட காரணமாய் அமைந்தது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான அனைத்து அடக்கு முறைகளும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் இல்லாதொழிக்கும் பட்சத்தில் முழு சமூகத்திலும் சமாதானமும், நீதியும் நிலைநாட்டப்படும் எனவும் ஐ.நா செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் சுதந்திர உடகத்தை கௌரவித்து, அதற்கான கொள்கைகளை மீண்டும் வலியுறுத்தி இந்தநாளை அனுஷ்டிப்பது அவசியமானதொன்று எனவும்அவர் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் பல்வேறு பட்ட சந்தர்ப்பங்களில் இழைக்கப்பட்ட துன்பங்கள் மற்றும் ஒழிப்பு செயற்பாடுகளால் ஊடகவியலாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.

உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. உலக ஊடக சுதந்திரம் குறித்த   180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில் உள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு ட்ரான்ஸ்பெரன்சி ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்ககையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது. மேலும் ஊழலுக்கெதிராக குரல் எழுப்பும்  ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு, சட்ட அமைப்பு மற்றும் ஊடக சுதந்திரம் என்பவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்