பேஸ்புக் நிறுவனத்திற்கு 3000 புதிய பணியாளர்கள் நியமனம்

பேஸ்புக் நிறுவனம் கொலை, விபத்து மற்றும் வன்முறை லைவ் வீடியோக்களை கட்டுப்படுத்த 3000 புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை இணைஅதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் இது தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள சமூகவலைதளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
காலமாற்றத்திற்கேற்ப தேவையான அப்டேட்களை பயனாளர்களுக்கு வழங்கிவருவதில் லைவ் வீடியோ வசதியும் ஒன்றாகும்.
சமீபத்தில் தற்கொலை செய்வோர் சிலர் தங்களது தற்கொலைகளை லைவ் ஆக ஒளிபரப்பி அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை பரிசீலனை செய்த பேஸ்புக் நிர்வாகம் மேற்கண்ட லைவ் வீடியோக்கள், கொலை, விபத்து மற்றும் வன்முறை வீடியோக்களை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக 3000 புதிய பணியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக குறித்த வீடியோக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

பயனாளிகளால் பதிவேற்றப்படும் வீடியோக்களில் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வீடியோக்களை வலைதளத்திலிருந்து நீக்கவும் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

எதிர்வரும் காலங்களில் இது போன்ற வீடியோக்களை கட்டுப்படுத்தி, நீக்குவதற்கான முறையான தொழில்நுட்பத்தை விரைவில் உருவாக்கவுள்ளதாகவும் மார்க் ஸக்கர்பெர்க், முதலீட்டாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்