ஈச்சம் பழ வரி

பல விலை கூடினாலும்
இந்தப்
பழ விலை கூடியது
ஈச்சம் பழக் கொட்டை போல்
இருக்கிறது கடினமாய்.

வரியை விதித்துள்ளார்
இல்லை
விதியை வரித்துள்ளார்
நோன்பு வரும்போது
வீம்பாய் செய்கிறார்கள்

ஈச்சம் பழம் பர்ளா
கூச்சல் இடுவது ஏன்?
பல விடயம் இருக்கும் போது
பழ விடயம் முக்கியமா?
கேட்கின்றார் கேள்விகளை
ஆட்கள் சில பேர்கள்

மாறிக் கேள்வி கேட்டால்
நாறிடும் நல்லாட்சி
ஈச்சம் பழ வரி கூட்டல்
ஈட்டித் தரும் லாபத்தால்
ஆச்சரிய ஆசியாவாய்
ஆகிடுமா இலங்கை நாடு

உண்ணாட்டு விவசாயியின்
உழைப்பைப் பாதுகாக்க
எண்ணை வரி அரிசி வரி
ஏற்றுவதாய் கூறினீரே
காத்தான்குடி உற்பத்தியை
காப்பாற்றும் நோக்கினிலா
ஈத்தம் பழ இறக்குமதிக்கு
ஏற்றினீர் வரித் தொகையை

ஈச்சம் பழம் இங்கு
ஈட்டும் பலம் ஆகி
எதிரணி ஆட்சியாளர்
அதிரடிப் பேச்சுக்களால்
‘தொப்பி’யைப் புரட்டு முன்னால்
தப்பிட வழி செய்வீர்
Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்