150ஆவது கனடா தினத்தை கொண்டாடும் முகமாக ரியுலிப் தோட்டம் அமைப்பு

150ஆவது கனடா தினத்தை கொண்டாடும் முகமாக மக்கள் ரியுலிப் பூக்கள் தோட்டத்தை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, 150 அடுக்குகளை கொண்ட 4 மில்லியன் ரியுலிப் பூக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஹோம் ஹாட்வெயர் என்ற ரியுலிப் பூக்கள் விற்பனை செய்யும் கடை வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து நபர் ஒருவர் குறிப்பிடுகையில், “கனடா தினத்தன்று பார்க்கக் கூடியதாக இருக்கும் என்பதால் எனது வீட்டில் குறித்த ரியுலிப் தோட்டத்தை உருவாக்கியுள்ளேன்.

கனடிய கொடிக்கு ஒத்ததாக சிவப்பு மற்றும் வெள்ளை இதழ்களை கொண்ட பூக்களாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த ரியுலிப் கிழங்குகளை நட்டேன்.” தெரிவித்தார்.

கனடாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையில் ஒரு நீண்டகால நட்பின் அடையாளமாகும் இந்த ரியுலிப் பூக்கள் காணப்படுகின்றது. 1945இல் முதன் முதலாக ஒரு இலட்சம் ரியுலிப் பூக்களை கனடாவிற்கு நெதர்லாந்து அனுப்பி வைத்தது.

இரண்டாம் உலக போரில் நெதர்லாந்தை விடுவிக்க கனடியர்கள் ஆற்றிய பங்கிற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்