மூடிய மூத்தம்மாவும்!! பெஷன் பேத்தியும்!!


மூத்தம்மா
சீத்தையால்
போத்தி உடுத்தா

பேத்திம்மா
பீத்திக்கிட்டு
அபாயா உடுக்கா

மூத்தம்மா
முகம் தவிர
முழுதும் மறையும்.
பேத்திம்மா
பெஷன் அபாயா
பெண்ட் விளங்கும்.

ஓலை வேலி
உம்மம்மா உள்ளே இருந்தா
பெரிய மதில் வீட்டுக்குள்
பேத்தி இருக்கா

ஓலை வேலி
உம்மம்மாவின் இரும்புக் கோட்டை
ஆளேதும் அணுக முடியா
அபாயக் கோட்டை

பெரியமதில் தடைதாண்டி
பேத்தி போணில்
நரிகள் பல நுழைகிறன
நவீன முறையில்

மூத்தம்மா
மூணு நேரம் சோறு திண்டும்
ஆத்தாடி நோயின்றி
அவ வாழ்ந்தா
பேத்தி
பிடிச் சோற்ற திண்டு போட்டு
கேஸ்ட்ரிக் வந்ததென்று
கிடந்து புலம்புறா

அலாரமே இல்லாத
அந்தக் காலம்
மூத்தம்மா மூணுமணிக்கே
முஸல்லாவில்

பல போண்கள் சுற்றி இன்று
அலறி நின்றும்
சூரியனும் பேத்தியும்
சேர்ந்தே எழும்புறார்

மோசமான
மூத்தம்மாவும் இருந்தார் அன்று
ஓசையின்றி
உள்ளால விசயம் செய்தார்

பேணுதலாய்
பேத்தி பலர் உள்ளார் இன்று
வீண் செயல்கள்
விலக்கியவர் வாழ்கிறார் நன்று

பொதுவாக
பொல்லாப்பு விடயம் நோக்கின்
இக்கால பேத்தியிடமே
இருக்கு அதிகம்.
Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்