ஆடிமாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா?

பொதுவாக திருமணம், புதுமனைபுகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் என கூறப்படுவது உண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம்.

அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆடிமாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதம் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் போது வெப்பம் அதிகமாக இருக்கும்.

அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் தான் ஆடிமாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன்–மனைவி கூடி இருப்பதையும் தவிர்த்தனர்.

மேலும் ஆடிமாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல்சீற்றமும் ஏற்படும். அதிக காற்றுவீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம், கிரக பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்