வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால முகாமைத்துவ வளங்கள்

ஒன்ராறியோவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அவசரகால முகாமைத்துவ வளங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்கு பாதிப்பினை எதிர்கொண்டுள்ள ஒட்டாவா, கிளாரன்ஸ் றோக்லன்ட், சம்ப்பிளன்ட் உள்ளிட்ட பிராந்தியங்களுக்கான நகரபிதாக்களுடன் தாம் தொடர்ச்சியாக தொடர்பை பேணி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ் வெள்ளத்தின் பாதிப்புக்களை எதிர்கொள்வதில் அவர்கள் களைத்துப்போயுள்ள நிலையில், தமக்கு கிடைத்துள்ள ஆதரவுக்காக அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் கத்தலின் வின் கூறியுள்ளார்.

கனடாவில் பல்வேறு பகுதிகளிலும் கரைபுரண்டோடும் வெள்ளத்துக்கு அதிகமான பாதிப்பினை ஈடுகொடுத்துள்ள கியூபெக்கில் மட்டும் 2,400க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், இதுவரை 1,500க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்