கனடாவுக்கு புலம்பெயர உரிமை கோருபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 8960 பேர் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு உரிமை கோரியுள்ளதாக கனேடிய புள்ளி விபரவியல் ஒன்று தெரிவிக்கின்றது.

2017ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதி வரையே குறித்த எண்ணிக்கையிலானோர் உரிமை கோரியுள்ளதாக கனடா அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் சூழல் நிலவும் நாடுகளான பாகிஸ்தான், சிரியா, நைஜீரியா போன்ற நாடுகளில் உள்ள மக்களே கனடாவுக்கு வர அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு மொத்தமாக 16,115ஆக இருந்த குறித்த எண்ணிக்கை இந்த வருடத்தின் மூன்று மாதங்களில் மட்டும் 8,960 பேரை எட்டியுள்ளமை அதியுச்ச அதிகரிப்பு என கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்