சர்வ மதங்களையும் காப்பதே நல்லாட்சியின் நிகழ்ச்சி நிரல்! – பௌத்தத்துகுரிய முன்னுரிமை அப்படியே இருக்கும் என்கிறார் மைத்திரி (photos)

அரசமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய முதன்மை இடம் பாதுகாக்கப்படும் என்றும், அதேபோல் சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவதே அரசின் நிகழ்ச்சிதிட்டமாகும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகுக்கு எடுத்துச்செல்லும் நோக்கிலேயே சர்வதேச வெசாக் தின நிகழ்வுகள் இலங்கையில் நடைபெறுகின்றன.
அதேபோல் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் படையினர் மேற்கொண்ட பணிகளை ஒருபோதும் மறந்துவிடமுடியாது. அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சலுகைகள் மேலும் அதிகரிக்கப்படும். அவர்களின் நலன்களை பாதுகாக்க அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும்” – என்றார்.
 ‘நமக்காக நாம்’ ரணவிரு வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 90 ரணவிரு வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்களை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.
‘சத்விரு சங்ஹி’ திட்டத்தின் கீழ் வீடமைப்புக்காக 503 இராணுவத்தினருக்கு தலா ஏழு இலட்சத்து ஐம்தாயிரம் ரூபா வழங்கிவைக்கப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர்,  சிவில் பாதுகாப்புப் படையணியின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்