7 ஓட்டங்களால் மும்பை அணியை வீழ்த்தியது பஞ்சாப்!

ஐ.பி.எல்.தொடரின் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான  போட்டியில் பஞ்சாப் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அடுத்தக் கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 3 விக்கட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை குவித்தது.

பஞ்சாப் அணி சார்பில் விரிதிமன் சஹா 93 ஓட்டங்களையும், மெக்ஸ்வல் 47 ஓட்டங்களையும் குவித்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

மும்பை அணி சார்பில் சிம்மன்ஸ் 59 ஓட்டங்களையும், பொல்லார்ட் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக விரிதிமன் சஹா தெரிவுசெய்யப்பட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்