முதன்முறையாக தரப்பட்டியல் இன்றி பிளஸ் 2 பரீட்சை முடிவுகள் வெளியானது!

தமிழகத்தில் முதன்முறையாக தரப்பட்டியல் இன்றி, பிளஸ் 2 பரீட்சை முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியுள்ளன.

காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குநரகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவியினால் வெளியிடப்பட்டதுடன், கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 0.7% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1% ஆகவும், மாணவர்கள் 89.3%, மாணவிகள் 94.5% ஆன தேர்ச்சி விகிதத்தினையும் அடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதுடன், மாணவியர் மாணவர்களைவிட 5.2% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்