எப்போதும் தமிழர் பக்கம் இருக்கும் இந்தியா! – கூட்டமைப்பிடம் மோடி உறுதி  (photos)

 
“நாம் எப்போதும் உங்களுடனேயே இருப்போம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று மாலை நேரில் தெரிவித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை இலங்கைக்கு வந்தார். அவர், இன்று கொழும்பிலும், மலையகத்திலும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். அதன் பின்னர் ஹெலி மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கு வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் சந்திப்பு நடத்தினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானா சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்