வட்ஸ்அப்பால் வந்த தப்பால்..!!!


வட்ஸ் அப் மெசேஜ் பார்த்து
வாழ்க்கையை அமைத்தவனின்
கஸ்டத்தைக் கேளுங்கள்
கடுப்பாகிப் போவீர்கள்

பன்றி கலந்த பொருள்
பட்டியல் மெஸெஜில் வர
ஒன்றுமே மிஞ்சவில்லை
உண்டு சுவைப்பதற்கு

கற்றவர் பெயர் கூறி
காட்டிய தகவல் படி
புற்று நோய் தராத செயல்
போர்த்திட்டு படுத்தல் மட்டும்

உண்ட பின் நட என்று
ஒரு மெஸேஜ் வந்து முடிய
திண்டு விட்டு ஓய்வெடுண்ணு
திருப்பி ஒரு மெஸெஜ் வரும்

மஞ்சக் கரு உண்ணல்
நஞ்சென்று மெஸேஜ் வந்து
அஞ்சு நிமிசத்தில்
அதெற்கெதிராய் மெஸெஜ் வரும்

ஜாலியாய் றால் டெவல்
ஜமாய்ங்கண்ணு சிலர் போட
போலியான றால் பற்றி
போடுவார் வேறு சிலர்

தூத்துகுடி கடையொன்றில்
சாத்துகுடியில் புழு என்று
காத்தான்குடி குரூப் ஒன்றில்
கண்டித்து மெஸேஜ் வரும்

டைட்டாக உடுத்து
வயிற்றைக் குறை என்பார்
தொள தொள ஆடைதான்
நலமென்றும் பகிர்வார்கள்

நல்லாத் தூங்குவது
நன்றென்று ஒரு மெஸேஜ்
உள்ள நேரமெல்லாம்
உழை என்று மறு மெஸேஜ்.

மெஸெஜ் பார்த்துக் குழம்பி
மெண்டலாகி மருந்தெடுத்தான்
விஷமுள்ள மருந்து அதென்று
வேற மெஸேஜ் கண்டு பயந்தான்

டேட்டாவை ஓப் பண்ணி
டே டு டே வேலை செய்து
பாட்டனார் போல் வாழ்ந்தான்
பட்ட துன்பம் ஓடியதே.
Mohamed Nizous

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்