கினிகத்தேனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் வேன், கார் மற்றும் வியாபார கடையும் சேதம்.

(க.கிஷாந்தன்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரம்பதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வேன், கார் மற்றும் கடை ஒன்றும் முற்றாக சேதமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து 13.05.2017 அன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மஸ்கெலியா வரை சென்ற வேன் ஒன்று கினிகத்தேனை ரம்பதெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த கடை ஒன்றுக்குள் உட்புகுந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் விபத்துக்குள்ளாகிய கார் சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளதுடன், வேன் மற்றும் வியாபார கடையும் சேதமடைந்துள்ளது.

வேன் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், இவ்விபத்தில் எவருக்கும் பாதிப்பில்லை எனவும், விபத்து ஏற்படும் போது காரிலும், வியாபார கடையும் எவரும் இல்லாததனால் ஏற்படவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டது என பொலிஸாரின் ஆரம்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்