மோடியை வரவேற்பதில் மாற்று அணியினரின் அடாவடிதனங்களை மீறி இ.தொ.கா தனது ஆதரவாளர்களை அணிதிரட்டியது.

இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்பதில் மாற்று அணியினரின் அடாவடிதனங்களை மீறி இ.தொ.கா தனது ஆதரவாளர்களை அணிதிரட்டியது – இ.தொ.கா தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் குழுவினர்கள் கடந்த பல நாட்களாக அடாவடி தனத்தில் ஈடுப்பட்டிருந்த போதிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஓர் இரு தினத்தில் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுக்கோளுக்கமைவாக ஜனநாயக கோட்பாட்டுடன் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்பதில் அணிதிரண்டு மிகவும் நாகரிகமான முறையில் நடத்துக் கொண்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

13.05.2017 அன்று கொட்டகலை தொண்டமான் தொழில்நுட்ப நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதில் மத்திய மாகாண சபையின் உறுப்பினர்களான ஏ.பி. சக்திவேல், கணபதி கனகராஜ் உள்ளிட்ட நுவரெலியா பிரதேச சபையின் முன்னால் தலைவர் எஸ்.சதாசிவன், இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் என சில முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றதில் கருத்து தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் மேலும் தெரிவித்ததாவது,

இ.தொ.கா அங்கத்தவர்கள் மோடியை வரவேற்பதில் பெரும் ஆர்வம் கொண்டனர். அவர்களுக்கு வெயில் சூடு படாது தலைக்கவசம் வழங்கப்பட்டது. அத்தோடு இ.தொ.காவின் 30 தொடக்கம் 40 ஆயிரம் அங்கத்தவர்களை அடையாளப்படுத்தும் வகையிலும் இந்த தலைகவசம் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட கட்சியின் தலைவர் ஒருவரை நோர்வூட் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் புகழ்பாடியதனால் அதை வெறுக்கதக்க பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதேபோன்று பிரதமர் மோடியினால் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் பெயரை உச்சரித்த போது உச்சாகத்துடன் வரவேற்று சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இதை பிரச்சினையையாக எண்ணக்கூடாது.

மலையக மக்களுக்கு வீடமைப்பு தொடர்பாகவும், நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைகழகம் அமைப்பது தொடர்பாகவும், மலையகத்தில் இடைநிறுத்தப்பட்டிருக்கும் ஆசிரியர் பயிற்சி தொடர்பாகவும், இந்திய அரசின் புலமைபிரிசில் விடயம் தொடர்பாகவும், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கப்பல் சேவையை தொடர் முகமாவும் என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

மலையகத்தில் தடைப்பட்டிருக்கும் இந்திய அரசின் ஊடான ஆசிரியர் பயற்சி நடவடிக்கையை மீண்டும் தொடர இந்திய அரசு உதவ வேண்டும் எனவும் வீடமைப்பு பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு வழங்கியுள்ள 4000 வீடுகளுக்கு அப்பால் மேலும் வீடுகள் தேவை என வழியுறுத்தப்பட்டது.

மேலும் 10,000 வீடுகளை இந்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி மேடையில் தெரிவித்தமையை இ.தொ.கா வரவேற்கின்றது.பிரதமர் மோடியை நோர்வூட் மைதானத்தில் முதலில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்தது இ.தொ.கா தான்.

இந்த கோரிக்கையின் பிரதியை இ.தொ.கா இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லிக்கு பிரதமரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதன் நகலை நோர்வூட்டில் பிரதமர் 12.05.2017 அன்று பிரதமர் மோடியிடம் கையளித்து பேச்சுநடத்தியது.

மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக பல்கலைகழக பிரச்சினை காணப்படுகின்றது.

இது விடயத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைகழகமொன்றை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும் என ஆறுமுகன் தொண்டமானினால் பிரதமர் மோடியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்தோடு இந்த பல்கலைகழகத்தை அமைக்க காணியை பெற்றுத் தருவதாகவும ஆறுமுகன் தொண்டமான் உறுதியளித்துள்ளார். கண்டிப்பாக பல்கலைகழகம் நுவரெலியா மாவட்டத்தில் அமைய இந்திய அரசு உதவி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்ததாக ஏ.பி.சக்திவேல் தெரிவித்தார்.

கண்டியில் இ.தொ.காவினால் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட மாநாட்டுக்கு சர்வதேச ரீதியில் பல தலைவர்கள் வருகை தந்தனர். இவ் வைபவத்தில் மகாத்மா காந்தியின் பேரனும் வருகை தந்திருந்தார்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக மகாத்மா காந்தியின் பேரனிடம் கிளங்கன் வைத்தியசாலை தொடர்பாக கோரிக்கையை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைவாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை 1200 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்