20ஆம் திகதி சம்பூருக்கு விரைகிறார் ஜனாதிபதி- வைத்தியசாலை திறந்து வைப்பு – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்- 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 40மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை சம்பூர் வைத்தியசாலை மாவட்டவைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு இம்மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால ஶ்ரீசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

குறித்த வைத்தியசாலையையும், ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள சம்பூர் கலாச்சார மண்டபம், கடற்கரை பூங்கா போன்றவற்றில்மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைட்டங்களை பார்வையிட்ட பின்னர் இன்று(12) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

23 ஆளனியுடன் உள்ள இவ்வைத்தியசாலையில் தாதியர் விடுதி, வைத்தியர் விடுதி, நோயாளர் விடுதி , வெளிநோயாளர்ப்பிரிவு கொண்டமுக்கிய பிரிவுகள் இவ்வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன்.  அதற்கான அனைத்து விதமான வைத்திய வளங்களும்வழங்கப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும், சம்பூர் பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த கடற்கரை பூங்கா மற்றும் கலாச்சார மண்டப வேலைத்திட்டங்களையும்,வைத்தியசாலைக் கட்டிட வேலைத்திட்டங்களையும் உரிய அதிகாரிகளுடன் விரைந்து பார்வையிட்டு மேற்கொள்ளப்படும்வேலைத்திட்டங்களின் முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்து அங்குள்ள பிரச்சினைகளை கேட்டறிந்து அது தொடர்பாக உரியவர்களிடமும்தொடர்புகொண்டதுடன் இவ்வேலைத்திட்டங்களை மிக அவசரமாக முன்னெடுப்பது தொடர்பாகவும் அங்கு உரியவர்களிடம் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடரஜான், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர்உசைனுடீன், மாகாணப்பணிப்பாளர் முருகானந்தன், பிராந்திய சுகாதார பணிப்பாளர் கயல்வெலி, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின்பிரத்தியேக செயலாளர் யூ.எல் வாஹிட், கிழக்கு மாகாண சுகாதர அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நயீம், பொலிஸ் அத்தியட்சகர்,வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்