யாழில் ரீச்சரை மடக்க நினைத்த பாடசாலை உப அதிபர்!

யாழ் நகரப் பாடசாலை ஒன்றில் உப அதிபராக கடமையாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் இன்னொரு பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு தொடர்ந்து காதல் வசனங்களை அவ் ஆசிரியையின் வைபருக்கு அனுப்பி வந்துள்ளார்.
குறித்த உப அதிபரின் போக்கைப் பார்த்த ஆசிரியை வைபரில் எச்சரிகை தகவல் அனுப்பியும் அவர் திருந்தவில்லை. அதன் பின்னர் தனது கணவனிடம் இது தொடர்பாக ஆசிரியை முறையிட்டுள்ளார். வைபரில் தொடர்பு கொண்ட ஆசிரியையின் கணவர் அதிபரை மரியாதையான வார்த்தைகளில் கேட்ட போது அதிபர் அது தனது 4 வயது மகன் அனுப்பியதாகவும் தனது போனில் இவ்வாறான படங்கள் இருந்தால் அவற்றை அவன் இவ்வாறு பலருக்கு அனுப்பியுள்ளான் எனவும் அதனால் தனக்கு பெரிய தலையிடியாக உள்ளதாகவும் சமாளித்துள்ளார். அதன் பின்னர் ஆசிரியையின் கணவர் பச்சைத் தூசணத்தில் அதிபரை அர்ச்சனை செய்ததுடன் அதிபர் கதைத்த மற்றும் தான் பேசிய ஒலிப்பதிவையும் அதிபரின் படத்துடன் அனுப்பி வைத்துள்ளார்.

செமினார் ஒன்றில் குறித்த அதிபர் அந்த ஆசிரியையை சந்தித்துள்ளதுடன் முக்கிய பாடம் ஒன்றின் ஆசிரியர் கை நூல் தேவை என தெரிவித்து ஆசிரியையின் தொலைபேசி இலக்கத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் வாங்கினார் எனவும் ஆசிரியை எமது இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த அதிபரைத் தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது அதிபர் அவற்றை மறுத்து தன்னில் பலருக்கு கடும் எரிச்சல் எனவும் வேண்டுமென்டு தன்னை இவ்வாறு தொல்லைப்படுத்துவதாகவும் இனிமேல் இவ்வாறு யாராவது உங்களுக்கு முறையிட்டால் எனக்கு தெரியப்படுத்தும்படியும் தான் அவர்கள் மீது பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்