இலங்கையில் மோடியை வேவு பார்த்த மர்ம இளைஞர்…!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த வாகன பேரணியில் யாருக்கும் தெரியாமல் தானும் கலந்து கொண்டு  அவரைப் பின் தொடர்ந்து வேவு பார்த்தவரென நம்பப்படும்  மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நரேந்திர மோடியுடன் பயணித்த பிரபுக்களுக்கான பாதுகாப்பு பிரிவு மோட்டார் சைக்கிள்களுடன் தானும்  இணைந்து சந்தேகத்திற்கிடமாக பயணித்த அந்த இளைஞர் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அவரது பெயர் W.A.D.  டில்ஷான் என்றும் தெரிய வருகிறது.
அந்த மர்ம இளைஞர் இளைஞர் கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 25 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்