துவிச்சக்கர வண்டியுடன் வேனொன்று மோதி விபத்து; ஒருவர் மரணம்.

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை.நிலாவௌி பிரதான வீதியில் இன்று (13) மாலை 5.30 மணியளவில் துவிச்சக்கர வண்டியுடன் வேனொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவௌி.கோனேஷபுரி சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசித்து வரும் பீ.கமல் ராஜ் (36வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளதுடன் வேனின் சாரதியை  கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவௌி பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்