மாணவர்களுக்கான உணவில் பாம்பு…!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் பாடசாலை  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்தது பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அரசாங்கப் பாடசாலையொன்றில்  நேற்று முன்தினம் பதினோராம் திகதி வியாழக்கிழமை  மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை தலைமை ஆசிரியர் வழமை போலவே  ருசி பார்க்க சென்றார். அப்போது உணவில் செத்த நிலையில் பாம்புக் குட்டி ஒன்று  கிடந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். பின்னர் மாணவர்கள் அந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டாம் என்று கூறித் தடுத்து விட்டார். அதன்  பின்னர் அவர் உரிய அதிகாரிகளுக்கு இந்த விடயம் பற்றித் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்