ரணிலின் கோரிக்கையின் பிரகாரமே மலையகத்துக்கு 10 ஆயிரம் வீடுகள்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளின் பிரகாரமே மலையக மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது என்று பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதுடில்லி சென்றிருந்தார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போதே ரணிலால் மலையக மக்களுக்காக மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 10 ஆயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை நேற்றுமுன்தினம் மலையக மக்களுக்கு வழங்கியுள்ளார்.
நோர்வூட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் மக்கள் மத்தியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, இந்திய அரசின் உதவியுடன் மலையகத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் 4 ஆயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்