விளையாட்டுக்கழக மைதான புனரமைப்புக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டிவைப்பு

மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதான புனரமைப்புக்கான அடிக்கல் வைபவ ரீதியாக நாட்டிவைப்பு
மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதான புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது.
பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பள்ளிமுனை பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்றீபன் அடிகளார்,மன்னார் பிரதேசச் செயலாளர் பரமதாஸன்,மன்னார் நகரசபையின் செயலாளர் பிரிட்டோ லெம்பேட்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு மன்னார் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டுக்கழக மைதான புனரமைப்பு பணிக்கான அடிக்கல்லினை நாட்டி அபிவிருத்தி பணிகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
-இதன் போது பள்ளிமுனை கிராம மக்கள்,விளையாட்டு கழக வீரர்கள்,பொது அமைப்பு,விளையாட்டுக்கழக பிரதி நிதிகள்,பள்ளிமுனை மீனவ அமைப்பின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்