மூவின அணிகள் ஒன்றிணைந்த மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி..

அலுவலக செய்தியாளர் ;காந்தன்

 

வீனஸ் விளையாட்டுக் கழகமானது அம்பாறை மாவட்டத்தின் தமிழ், சிங்கள, முஸ்லீம் என மூவின அணிகளையும் ஒன்றிணைத்து நடாத்திய மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது இன்று (14) வளத்தாப்பிட்டி பொது மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மகாணசபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன் மற்றும் ரீ.கலையரசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் கௌரவ அதிதிகள், விசேட அதிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வின் முக்கிய அம்சமாக தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் முகமாக ஊக்குவிப்புச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டனது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்