நியூசிலாந்தில் இருந்து அரசாங்கம் 90மில்லியன் ரூபாய் செலவில்; இரண்டாயிரம் நல்லின பசுமாடுகள் இறக்குமதி

நியூசிலாந்தில் இருந்து அரசாங்கம் 90மில்லியன் ரூபாய் செலவில்; இரண்டாயிரம் நல்லின பசுமாடுகள் இறக்குமதி மேலும் மாடுகளை பாக்கிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை
நல்லாட்சி அரசாங்கத்தின் மக்கள் நல அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கல்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்திகளை அதிகரிக்க செய்யும் வகையில் ஈரவலய பிரதேசங்களில் வளரும் இரண்டாயிரம் (2000) நல்லின பசு மாடுகளை கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 90மில்லியன் ரூபாய்; நிதி ஓதுக்கீட்டின் கீழ்; நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாடுகளை ஊவா மற்றும் மத்திய மாகாண பன்ணையாளர்களின் விண்னப்பத்திற்கமைவாக அரசாங்கம் 50 வீத மானிய அடிப்படையிலும் பன்னையாளர்களின் பங்களிப்புடனும் இது அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதனை உத்தியோக பூர்வமாக வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை 13.05.2017 திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி. ஹரிஸன், பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நியூசிலாந்து இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த நல்லின வர்க்கத்தையுடைய கரவை பசு மாடு ஒன்றின் பெறுமதி 450,000 ரூபாய் ஆகும்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர எம்.எஸ்.எஸ்.அமீர் அலி உரையாற்றுகையில்
“எதிர்வரும் காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பன்னையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இப்பிரதேச கால நிலைக்கு ஏற்ற வகையில் அந்ந சூழலில் வளரக் கூடிய பசுமாடுகளை பாகிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்து வருவதாக தமது உரையின் போது குறிப்பிட்டார்.

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்