70 வயது நபரால் சிறுமிக்கு நடந்த விபரீதம் : பெற்றோரே கவனம்

பாட­சாலை மாண­வி­யான 14 வயது சிறு­மியை ஒரு வரு­டத்­துக்கு  மேலாக துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்தி  வந்த 70 வயது நப­ரொ­ரு­வரை குறுந்துவத்த பொலிஸார் கைதுசெய்­துள்­ளனர். குறித்த சந்தேகநபரை கம்­பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் சாந்­தினி மீகொட முன் நிலையில் நேற்­றுமுன்தினம்  ஆஜர்படுத்­தி­ய ­பொ­ழுது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறி­யலில் வைக்குமாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

குறுந்து வத்த ஈவால்­கொல்ல  குடி­யி­ருப்பில் தனி­மையில்  வசித்து வந்த  சந்­தேக நபர் தமது அயல் வீட்டில் வசித்த மேற்படி சிறு­மியின் குடும்­பத்­தி­னரின் வறுமை நிலையை பயன்படுத்தி பெற்றோர் வேலைக்குச்  செல்லும் சந்­தர்ப்­பங்­களில் சிறு­மியை ஏமாற்றி  ஆசை­வார்த்தை பேசி  மேற்­படி குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக விசா­ர­ணைகள் மூலம் தெரியவந்­துள்­ளது.

குறித்த சிறுமி தனது வகுப்­பா­சி­ரி­யை­யிடம்  இது­தொ­டர்பில் தெரி­வித்­த­தை­ய­டுத்தே இவ்­வி­டயம் வெளிச்­சத்­திற்கு வந்­துள்­ளது.  இதன் போது பாதிக்கப்பட்ட சிறுமி கம்­பளை வைத்­தியசாலையில் அனு­ம­திக்­கப்­பட்டு அங்கு மேற்­கொள்ளப்பட்ட பரி­சோ­த­னையின் போது தொடர்ச்சியாக வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத் தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்