எச்சந்தர்ப்பத்திலும் இணைய தாக்குதல்

இணைய தாக்குதல்களில் இருந்து தமது கணனிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கணனி அவசர பதிலளிப்பு மன்றம் கணனிப் பாவனையாளர்களை கேட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் இணைய ஊடுருவல் தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இணைய ஊடுருவல் தாக்கத்தினால் சுமார் 150 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சம் கணனி மென்பொருள் கட்டமைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பல ஐரோப்பிய நாடுகள் உள்ளடங்கலாக இந்த வைரஸ் தாக்குதல் ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளையும் பாதித்துள்ளது. இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக ஐரோப்பிய பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ரொப் வெயின் ரைட் தெரிவித்தார்.
இந்த வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொள்வறதற்கு உரிய வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை தமது கணினிகளில் பதிவு செய்து கொள்ளும்படி கணனி பயனர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
99 நாடுகளின் கணனி கட்டமைப்பிற்கு இந்த ஊடுருவல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடுதலான தாக்கம் ரஷ்யாவிற்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் இந்தக் கணனி ஊடுருவல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அந்நாட்டு கணனிக் கட்டமைப்புக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த ஊடுருவல் தாக்குதலால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என கணனி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலமை எதிர்வரும் தினங்களில் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்படலாம். அதனால் அதில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கணனி அவசர பதிலளிப்பு மன்றம்; கணனிப் பாவனையாளர்களை கேட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்