வாக்களிக்க தகுதி பெறுவோரின் வயதெல்லை குறைக்கப்படும்: தெரேசா மே

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அதிகாரம் கிடைத்தால் தற்போது நடைமுறையில் உள்ள வாக்களிக்கத் தகுதி பெறுவோரின் வயதெல்லை குறைக்கப்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபட்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

16 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற வேண்டும் எனும் கருத்திற்கு தொழிற்கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சி, ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி என்பன ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் யூகிப் கட்சி என்பன எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், வாக்களிக்கத் தகுதியுடைய குறைந்தபட்ச வயதெல்லையை நிர்ணயிப்பதற்கு கன்சர்வேட்டிவ் கட்சியும் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் சர்வதேச வானொலியொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள மே, குறைந்தபட்ச வயதெல்லையாக 18 இனை நிர்ணயிப்பதே சாலச் சிறந்தது என தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கடந்த 2014ஆம் ஆண்டு பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வது குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பிற்கு 16 மற்றும் 17 வயது நிரம்பியோரும் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்