நான் அரசியலுக்கு வருவது குறித்து கடவுள்தான் முடிவு செய்ய வேண்டும்: ரஜினிகாந்த்

“நான் அரசியலுக்கு வருவது குறித்து முடிவெடுக்கும் சக்தி கடவுளுக்குத்தான் உள்ளது. அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில்கூட சேர்க்கமாட்டேன்” என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இரசிகர்களை சந்தித்து அவர்கள்  முன்னிலையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 21 ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காக சிலர் என் பெயரை அரசியலில் பயன்படுத்துகின்றனர்.

நான் நன்கு யோசித்த பிறகே எந்த முடிவையும் எடுப்பேன். அரசியலை வைத்து சம்பாதிப்பது நியாயமானதா? நான் சூழ்நிலையால் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்த்துக்கொள்ள மாட்டேன். நான் கடவுளின் கருவியாக இருக்கிறேன். என்னை கருவியாக கடவுள் பயன்படுத்துகிறார்.

நான் தற்போது நடிகனாக இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். பின்னர் என்னவாக வேண்டும் என்பதை கடவுள்தான் முடிவு செய்வார். கடவுள் கொடுக்கும் அந்த வேலையை மனசாட்சியுடன் செய்வேன். அப்படி நான் (அரசியலை குறிப்பிடாமல்) வர வேண்டும் என்று கடவுள் விரும்பினால் கண்டிப்பாக வருவேன். அப்போது பணத்திற்கு ஆசைப்படுபவர்களை  சேர்த்துக் கொள்ள மாட்டேன்’’ என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்