இளைஞர்களே! போதைக்கெதிராக சவால் விடுக்க வாருங்கள்: பிரதியமைச்சர் அமீர் அலி

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைவஸ்துப் பாவனையைத் தடுக்குமுகமாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் கௌரவ எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் தமது அமைச்சின் 1.5 மில்லியன் ரூபாய் நிதியினை ஆரம்ப கட்டமாக மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.
அதன் மூலம் மாவட்டத்தின் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் விஷேடமாக பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொது மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன் பிரதிபலிப்பாக இப்பிரதேசங்களில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் மாபெரும் போதைவஸ்துப் பாவனைக்கெதிரான கூட்டங்கள் பேரணிகள் இடம்பெற்று வருகின்றது.
கல்குடாவில் அமைக்கப்பட்டு வரும் மதுபான தொழிற்சாலைக்கெதிராக அதனை தடை செய்ய நடவடிக்கையெடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கோரிக்கையொன்றினையும் சமர்ப்பித்துள்ளார். எது எவ்வாறாயினும் மக்களைப்பாதிக்கும் எந்த விடயத்திற்கும் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லை என்ற உறுதியான அறிக்கையினை அவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்