திருகோணமலை கந்தளாயில் இருந்து கொழும்புக்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 61 ஆடுகளை கொண்டு சென்ற மூவர் கைது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கந்தளாயில் இருந்து கொழும்புக்கு டொல்பின் வேன் ஒன்றில் 61 ஆடுகளைச் கொண்டு சென்ற மூவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை(14) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனின் சாரதியொருவரும்,இரண்டு உதவியாளர்களுமே கைது செய்துள்ளதாகவும் குறித்த சந்தேக நபர்கள் குருணாகல்,மற்றும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.       கால்நடைகளை துன்புறுத்தும் வகையில் சிறிய வேனில் 61 ஆறுகளை கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    சந்தேக நபர்கள் பயன்படுத்திய வேன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு இன்று திங்கட்கிழாமை(15) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கிறனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்