மன்னார் அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் திருடப்பட்ட ‘இறை இரக்க ஆண்டவர் திருச் சொருபம்’ கண்டு பிடிப்பு 
  மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் இறை இரக்க ஆலயத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இனம் தெரியாத நபர்களினால் திருடப்பட்ட ‘இறை இரக்க ஆண்டவர் திருச் சொருபம்’ கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக அடம்பன் ஆக்காட்டி வெளி பங்குத்தந்தை அருட்தந்தை எ.டெஸ்மன் அஞ்சலோ தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக   தெரிவிக்கையில்
மாந்தை  மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ‘அடம்பன் இறை இரக்க ஆலையத்தில்’ கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலயாதின் உற்பகுதிக்குச் சென்ற இனம் தெரியாத நபர்கள் ஆலயத்தில் உள்ள கண்ணாடிகளை உடைத்து இறை இரக்க ஆண்டவர் திருச் சொருபத்தை திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த ஆலயத்தின் பங்குத்தந்தை உற்பட கிராம மக்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை செய்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று (15) திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கருங்கண்டல் கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட சில இந்து மத நண்பர்கள் காணாமல் போன இறை இரக்க ஆண்டவர் திருச் சொருபம் குறித்த குளத்தில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.
-இந்த நிலையில் குறித்த சொரூபத்தை கண்ட குறித்த நபர்கள் உடனடியாக் அடம்பன் பங்குத்தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பங்குத்தந்தை  குரு முதல்வர் மற்றும் அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு தெரியப்படுத்தினார்.
-பின்னர்  மீட்கப்பட்ட குறித்த திருச் சொருபம் மீண்டும் அடம்பன் இறை இரக்க ஆலயத்தில்  கொண்டு வரப்பட்டு மக்களின பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்