கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்

பிரித்தானிய பொதுத் தேர்தலின் பின்னர், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என பிரதமர் தெரேசா மே உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் பிரித்தானியாவில் சூடுபிடித்து வரும் நிலையிலேயே மே இன்று (திங்கட்கிழமை) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தால் தொழிலாளர்கள் தற்போது அனுபவித்து வரும் அனுகூலங்கள் பாதிக்கப்படாது தொடர்ந்தும் கிடைக்கப்பெறும் வகையில், வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தொழிலாளர் ஒருவரின் உறவினர் ஒருவரை கவனிக்கும் பொருட்டு சுமார் ஓராண்டு கால ஊதியமற்ற விடுப்பிற்கு தொழிலாளர்கள் உரித்துடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தொழிற்கட்சி, தெரேசா மே தொழிலாளர்களை முட்டாள்களாகவே நோக்குகின்றார் என தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்