விடுதலைப்புலிகளின் அடையாளங்கள்  இப்போதும் முள்ளிவாய்க்கால் மண்ணில்! (photo)

ஆயுத ரீதியான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் விடுதலைப்புலிகளின் எச்சங்கள் பலவற்றை தன்னகத்தே சுமந்த வண்ணம் இந்த உலகுக்கு பல செய்திகளை எடுத்துக் கூறிய நிலையில் உள்ளன.
விடுதலைப் புலிகள் தங்களை படையணி ரீதியாகவோ அல்லது நிர்வாக ரீதியாகவோ அடையாளப்படுத்துவதற்காக தகடுகளில் இலக்கம் பொறிக்கப்பட்டு மூன்று இடங்களில் அணிந்து கொள்வார்கள்.  அவர்கள் இடுப்பு பகுதியில் அணியும் தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சிக்கியுள்ளது.
இந்தத் தகட்டுக்கு மற்றும்மொரு சிறப்பு ஒன்று உள்ளது. விடுதலைப்புலிகள் வளங்களை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதையும் எமக்கு தெரிவிக்கின்றது. 2 பக்கங்களிலும் இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு பக்கத்தில் இலக்கம் அழிக்கப்பட்டுள்ளது.
“இறுதியில் வளங்களைப் பெற்றுக்கொள்வதில் பல சிரமங்களை எமது விடுதலை இயக்கம் சந்தித்தது. புதிய போராளிகளுக்கு உரிய தகடுகளை பெற்றுக்கொள்ளவதிலும் சிரமங்களை எதிர்கொண்டோம். அதனை நிவர்த்தி செய்வதற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தகட்டுக்கு உரிய போராளி வீரச்சாவடைந்தால், அவருடைய இலக்கத்தை அழித்துவிட்டு புதிய இலக்கம் பொறிக்கப்பட்டு புதிய போராளிக்கு வழங்கப்படும்” என்று முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் சிதறிக்கிடக்கும் ஒவ்வொரு எச்சங்களின் பின்னும் பல வரலாறுகள் புதைந்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்