“என் படம் பாகுபலி போல ஓடியிருந்தால். .” கண்ணீர்விட்ட பிரபல தமிழ் நடிகர்

சமீபத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வசூலில் உலகமே வியக்கும் அளவுக்கு சாதனை படைத்து வருகிறது. வரலாற்று படங்கள் இதற்குமுன் பல வந்திருந்தாலும் இது போல பிரமாண்டமாக எதுவும் வெற்றி பெறவில்லை.

அத்தகைய ஒரு படம் தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்த பார்த்திபன் அதை நினைத்து கண்ணீர் விட்டுள்ளார்.

“ஆயிரத்தில் ஒருவன் படம் மட்டும் பாகுபலி போல வெற்றி பெற்றிருந்தால் பார்த்திபன் உலகபுகழ் பெற்ற நடிகராகியிருப்பார்” என ஒரு ரசிகர் போட்ட மீம் தனக்கு கண்ணீர் வரவைத்துவிட்டதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்