துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விக்கு காரணம்: தலைவர் கௌதம் கம்பீர்

துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விகளுக்கு காரணம் எனவும் இனிவரும் போட்டியில் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தலைவர் கௌதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் வெளியேறுவதற்கான போட்டி நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த போட்டியின் போது, எதிரணியினர் பெற்றுக் கொண்ட 174 ஓட்டங்களை இலகுவாக பெற்றுக் கொள்ள கூடியதாக இருந்தததாகவும் ஆனால் தமது அணி வீரர்கள் சிறந்த முறையில் விளையாடவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

தமது அணியின் வீரர்கள் பந்தை அடித்து ஆட வேண்டும் என்று நினைப்பதாகவும் நிதனமாக துடுப்பெடுத்தாட முயற்சிக்கவில்லை எனவும் கவலை வெளியிட்டார்.

அடுத்து நடைபெறவுள்ள போட்டியில் இவ்வாறான தவறுகளை விடுத்து சரியான முறையில் அணியின் வீரர்கள் விளையாடுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்