பணம் செலுத்தியும் கணிணிகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை: வெள்ளை மாளிகை

இணையத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள கணிணிகளை பழைய நிலைக்கு கொண்டுவரும் பொருட்டு பெரும் பணத்தொகை செலுத்தப்பட்டுள்ள போதும் அந்த கணிணிகள் பழைய நிலைக்கு திரும்பவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள கணிணிகளை பழைய நிலைக்கு கொண்டு வரும் பொருட்டு சுமார் 70,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படதாகவும் ஆனால் அதனால் எதுவித பலனும் கிட்டவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரான்சம்வெயார் (Ransomware) என அழைக்கப்படும் இணையத் தாக்குதல் முறைமை, கணிணியில் உள்ள மென்பொருட்களை ஊடுருவுவதோடு குறித்த இணையத்தளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பணம் கேட்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) வொஷிங்டன் டி.சியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய டொனால்ட் டரம்பின் உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் டொம் பொஸ்சர்ட் (Tom Bossert), “இந்த இணையத் தாக்குதலுக்கு இதுவரை கிட்டத்தட்ட 150 நாடுகள் உள்ளாகியுள்ளன. அத்துடன், குறைந்தது 300,000 கணிணிகள் இதன் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன” என தெரிவித்தார்.

பிரித்தானியா, ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகள் இந்த இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்