சாம்பியன்ஸ் கிண்ணத்துக்காக இலங்கை அணியின் பயண விபரம் அறிவிப்பு.

 

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ணத்துக்காக சகலவித பயிற்சி நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இங்கிலாந்து பயணப்படும் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ம் திகதி மாலை 5 மணிக்கு உத்தியோகபூர்வ புகைப்பட பிடிப்புக்கு பின்னர்,மாலை 5.30 அளவில் ஊடக சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

அதன்பின்னர் அஞ்சேலோ மத்தியூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் கிண்ணத்துக்காக இங்கிலாந்து நோக்கி புறப்படும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்